காரைக்கால்-கேகேஎஸ்-கப்பல் அதானி பினாமியிடம்

 


காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இந்த மாதக் கடைசியில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறைக்கு Ferry service துவக்கப் படுகிறது. ஒரு வழி கட்டணம் 50 USD/-இது சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்காக என்று சொல்லப்படுகிறது. 

இந்த துறைமுகம் MARG என்ற  தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. தொடர் நஷ்டத்தால் பாரத ஸ்டேட் வங்கியில் சுமார் 4000 கோடி கடனில் மூழ்கி இந்த துறைமுக நிறுவனம் தவித்து வந்தது. இதனை காப்பாற்றும் முகமாக ரூபாய் 3000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ரூபாய் 1000 கோடிக்கு அதானி நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே எண்ணூர் துறைமுகமும் அதற்கு அருகே 200 ஏக்கர் நிலமும் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டது . காரைக்காலுக்கு அருகிலேயே நூற்றாண்டுகள் பழமையான நாகப்பட்டினம் துறைமுகம் ஏற்கனவே குப்பையில் தூக்கி போடப் பட்டுள்ளது. 

ஏற்கனவே பூநகரி கௌதாரிமுனை மற்றும் மன்னாரில் காற்hலைகளை மைக்க தானிக்கு பெருமளவு தரைப்பகுதி தாரைவார்க்கப்பட்டள்ளம குறிப்பிடத்தக்கது


No comments