வெடுக்குநாறிமலை:வழிபட தடையில்லையாம்!
வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கத்தை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்தவொரு அரச அதிகாரியும் தடுக்க கூடாது என வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கில் காவல்துறையினர்; இனந்தெரியாத நபர்களினால் வணக்கத்திற்குரிய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்கள். 

ஆனால், எவரும் கைது செய்யப்படவில்லை. யாரென்று தெரியாது தொடர்ந்து விசாரணைகளை முன்னேடுப்பதாக சொல்கின்றனர்.

வுழிபாட்டு உரிமை தொடர்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நீதவான் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார். 

அதாவது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு கொடுக்கப்பட்டு காவல்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


No comments