31வது நாடாக நேட்டோவில் இணைந்தது பின்லாந்து


உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் 3-ம் உலகப்போருக்கு அது அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று இணைந்துள்ளது. நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது. பின்லாந்து ரஷியாவுடன் எல்லையை பகிர்கிறது. நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்ததால் அந்த நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தியுள்ளது.

No comments