யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் வவுனிக்குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரும் அவரது சகோதரனான சிறுவனும் முல்லைத்தீவு ,  மல்லாவி, வவுனிக்குளத்தி்ல் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மல்லாவியில் நடந்த மரணச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் இன்றைய தினம் புதன்கிழமை குளத்தில் நீராடிய வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

27 வயதுடையவரும் 16 வயதுடையவருமே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர். எனவும் சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments