அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு - நால்வர் உயிரிழப்பு


அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்திற்கு காரணமானவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் இளம்வயதினர் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments