தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 26 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 26 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களுக்கு இடையில் இடைவெளி விடாமல் சென்றமையே இந்த விபத்திற்கு காரணம் என நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வாகனங்கள் சேதம் அடைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

No comments