இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்


பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்காக சர்வதேச நாணய நித்தியத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து அமுல்படுத்துவோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடனும் சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடனும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments