பட்டாசு ஆலையில் வெடி விபத்து - இருவர் உயிரிழப்பு


சிவகாசியில்பட்டாசு ஆலையில் இன்றைய தினம் இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்தில், தங்கவேல் (வயது 55), கருப்பசாமி (வயது 32) ஆகிய இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

மாரித்தாய், கருப்பம்மாள் ஆகிய இரு பெண் தொழிலாளர்கள்  படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஆலையின் இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில்,  தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து மாரனேரி காவல் நிலைய பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  

No comments