நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா


நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்கினை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) ரொக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நிலவில் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தவும், பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்கவும் இந்த நெட்வொர்க் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் நிலவின் நெட்வொர்க், எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான தகவல் தொடர்பு தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் என்றும் விண்வெளித் தொடர்புத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்ட முடியும் என்றும் நிலவின் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments