முட்டை பிரச்சினை பெரும் பிரச்சினை!



அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம் விதித்து கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பொரலஸ்கமுவ மற்றும் பொகுந்தர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள மூன்று வர்த்தகர்களுக்கு, முட்டையை ரூ.44 என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி ரூ.50க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தலா 300,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளைப்பச்சை அரிசியை கட்டுப்பாட்டு விலையான 210 ரூபாவுக்கு விற்காமல் 240 ரூபாவுக்கு விற்ற வர்த்தகர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றம் அவருக்கு 3 லட்சம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

No comments