சீனா ,இந்தியா அடுத்து எகிப்து?



சீனா ,இந்தியாவென வடகிழக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்திவருகின்ற நிலையில் கடலுணவு உற்பத்தியாளர்களுக்கும் உதவுவதற்கு தாமும் ஆர்வமாக இருப்பதாக எகிப்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற சந்திப்பின் போதே எகிப்து தூதுவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

முன்னதாக சர்வதேச முதலீடுகளும், ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன என எகிப்து தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அப்போதே தமது நாட்டின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன், விரைவில் வட மாகாணத்திற்கு தான் வருகை தர எதிர்பார்ப்பதாகவும் தூதர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை சார்ந்து மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை எடுத்துரைத்ததுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதியுதவி கிடைக்குமானால்;திட்டங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இதன்போது டக்ளஸ் தெரிவித்துள்ளார்.


No comments