யாழில். 64 கிலோ கஞ்சா மீட்பு!


யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றது. 

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை மறித்து சோதனையிட முயன்றவேளை மோட்டார் சைக்கிள் பயணித்த நபர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். 

அதனை அடுத்து, மோட்டார் சைக்கிள் இருந்த பொதி ஒன்றினை சோதனையிட்ட போது, அதில் இருந்து 14 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அந்நிலையில் தப்பி ஓடிய சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை சுழிபுரம் பகுதியில் பற்றைக்காட்டு ஒன்றில் மறைத்து வைக்கப்படிருந்த 50 கிலோ கேரள கஞ்சாவை இராணுவத்தினா் மீட்டுள்ளனா். 

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது.

மேலதிக நடவடிக்கைக்காக மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments