டக்ளஸை துரத்தும் நிமலராஜன் ஆவிஅரச அமைச்சர் டக்ளஸ்  தொடர்புபட்டதாக கூறப்படும் யாழ்ப்பாண ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர் தெடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னணி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், 2000 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில், கடந்த ஆண்டு, 49 வயதான ஈபிடிபி இராணுவத்தளபதியென அடையாளப்படுத்தப்பட்ட நெப்போலியன் எனும் நபர் ஒருவர் பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை உள்ளடக்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியாளர் நிமலராஜன், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி கொல்லப்பட்டதோடு, துப்பாக்கிதாரிகளால் அவரது தந்தை மற்றும் மருமகன் உள்ளிட்டவர்களும் கைக்குண்டு வீச்சில் படுகாயம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments