பயப்படவேண்டாம்:டக்ளஸ்!
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்கள் குழம்பத்தேவையில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "புதிதாக உருவாக்கப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டமாகவே இருக்கும். தொடர்பான சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து வாதப்பிரதி வாதங்களின் பின்னரே சட்டமாக அறிவிக்கப்படும். எனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக மக்கள் குழப்பமடைய தேவையில்லை" எனவும் தெரிவித்தார்.
இதனிடையே பயங்கரவதா தடைச்சட்டம் அமுலில் இருந்த போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.
Post a Comment