இளம் பிக்குகள்:விட்ட பாடாகவில்லை!




இலங்கையில் இளம் பிக்குகள் மீதான பௌத்ததுறவிகளது பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் தொடர்;ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டேவருகின்றது.

இந்நிலையில் அம்பாறையில் இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 22 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை கல்முனை விகாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு கடந்த புதன்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு எதிர்வரும் ஜுன் மாதம் 22 ஆம் திகதி வரை மறுவிசாரணைக்காக வழக்கினை கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட பல தமிழ் சிறார்கள் பௌத்ததுறவிகளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பி;டத்தக்கது.


No comments