யாழில் ஓட்டப்போட்டியில் 75 வயது பாட்டி - குவியும் பாராட்டுக்கள்!


யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டியில் பாட்டியொருவர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


அண்மையில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதன் போது பழைய மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் , பாடசாலை பழைய மாணவியான 75 வயதான புனிதவதி எனும் பாட்டியொருவரும் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த ஓட்ட போட்டி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பாட்டிக்கு பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட பாட்டிக்கு விசேட பரிசு வழங்கப்பட்டுள்ளது.

No comments