எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கூட்டாக கடிதம்!!


எதிர்வரும் மார்ச் 19 அல்லது அதற்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு, எதிர்க்கட்சிள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கையொப்பத்துடன் கடிதமொன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கு இருந்த ஓரேயொரு தடையை உயர் நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளதால், எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், இது சம்பந்தமாக திறைசேரி செயலாளருடனோ வேறு எவருடனுமோ நீங்கள் கலந்துரையாடத் தேவையில்லை என அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி முன்னதாக, தேர்தலை நடத்கூடிய திகதியை தாமதமின்றி நியமிக்குமாம் தேர்தலை ஆணைக்குழு உறுப்பினர்களை, நாளை (7) காலை 9 மணிக்கு தேர்தல்கள் செயலகத்தின் சந்திக்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சிகள் அந்தக்கடிதத்தில் கோரியுள்ளன.

No comments