தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து பெண் கொலை!


தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments