சீருடைக்கு சீன உதவி!



வடகிழக்கில் சீன உதவிகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு பெரும் முயற்சிகளை முன்னெடுத்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைக்கு  தேவைப்படும் 70விழுக்காடு சீருடைத் துணியை சீனா  நன்கொடையாக அன்பளிப்பு செய்துள்ளது. 

சீருடைகளுக்கான  7.8 பில்லியன் ரூபாய் பணத்தை திரட்ட முடியாத நிலையில் சீனா அரசாங்கம் 5.5 பில்லியன் ரூபா பெறுமதியான  சீருடை துணிகளை அன்பளிப்பு செய்துள்ளது.

சுமார் 9 மில்லியன் மீற்றர்; சீருடை துணி இலங்கைக்கு  அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு  சீனாவிடமிருந்து இலவசமாக பெறப்பட்ட  சீருடை துணிகளை மாணவர்களுக்கு வழங்க நாடு முழுவதும் அரச நிதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்ட நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்த சம நேரத்தில் நாடெங்கும் அரச நாடாளுமன்ற உறுப்பினர்களை  அழைத்து சீருடை துணிகளை வழங்கும் விழாக்களை  நடத்த கல்வி அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


No comments