விபத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பலி!


அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் சிக்கிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 6.45 மணியளவில் உந்துருளியில் சென்றுக் கொண்டிருந்த அவர்,  பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#######

சிங்களவரான இவர் 2010 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

எனினும் பின்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார்.

அதேநேரம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments