உக்ரைனுக்கு மிக்-29 ரக போர் விமானங்களை வழங்குகிறது போலந்து


உக்கரைக்கு நான்கு மிக்-29 ரக போர் விமானங்களை வழங்குவதாக போலந்து அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா நேற்று வியாழக்கிழமை வெளியிட்டார்.

வரும் நாட்களில் உக்ரைனுக்கு நான்கு மிக்-29 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். 

போலந்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாற்றிய உக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறும்போது மிக் போர் விமானங்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது. எங்களுக்கு எவ்-16 போர் விமானங்கள் தேவை. ஆனால் மிக் போர் விமானங்கள் எங்கள் திறன்களை வலுப்படுத்த உதவும் என்றார்.

போலந்திடம் சுமார் 15 மிக் விமானங்கள் உள்ளன, அவை 1990 களில் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் ஆயுதப் படைகளான ஜிடிஆரிடமிருந்து பெறப்பட்டன. எனவே நாங்கள் இந்த மிக் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப உள்ளோம் என்று நாங்கள் கூறலாம் என்றார்.

மிக்-29 போர் விமானங்கள் உக்ரேனிய விமானிகள் கூடுதல் பயிற்சி இல்லாமல் இன்றும் பயன்படுத்தக்கூடிய விமானங்கள் என்று அவர் கூறினார்.

இந்த மிக் விமானங்கள் போலந்து விமானப்படையில் இன்னும் சேவையில் உள்ளன.

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் நேட்டோ உறுப்பு நாடுகளின் போலந்தின் முதல் விநியோகமாகும்.

அமெரிக்க எவ்-16 விமானங்களைப் பெறுவதற்கான நம்பிக்கையில், நவீன போர்-குண்டுகளை அனுப்புமாறு உக்ரைன் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டது.

ஜனாதிபதி ஜோ பிடன் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதை பகிரங்கமாக எதிர்த்து வந்தமை இங்கு நினைவுகூரத்தக்கதது.


No comments