வியாழேந்திரன் மோசடிக்காரன்?மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்த போன நபர்களின் பெயர்களில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரச காணிகள் விற்கப்படுவதாகவும், இராஜாங்க அமைச்சர்கள் சிலரும் இதற்கு உடந்தையாக இருப்பதாக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்பாளர் சதாசிவம் மயூரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே மயூரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரரான மயூரன் காணி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பெயரில் மயூரன் மோசடிகளை மேற்கொண்டிருந்ததாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் அதனை வியாழேந்திரன் மறுதலித்திருந்தார்.

இந்நிலையிலேயே தனது சகோதரனான இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான்  என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதனிடையே முஸ்லிம் மக்களால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி நல்லிணக்கம் பேசி, முஸ்லிம் கட்சிகளோடு சேர்ந்து, தேர்தல் கூட்;டுக்களை வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தமிழரசுக்கட்சிக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளார்.


No comments