பத்து ரூபா குறைகின்றது பாண்!இலங்கையில் 450 கிராம் ஒரு இறாத்தல் பாண் ஒன்றினை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாகவும், அதன் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பாண் சில இடங்களில் 150 ரூபா தொடக்கம் 180 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வாறான எந்தவொரு விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஜயவர்தன தெரிவித்தார்.

 ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில்  இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

No comments