கடனுக்கு நன்றி:வெடி கொழுத்தும் தெற்கு!



 அடுத்த இரண்டு நாட்களில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வழங்கவுள்ள 3 பில்லியன் டொலரில் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு முதல் தவணையாகப் பெற்றுக்கொள்ளும் என  தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தென்னிலங்கை வெடிகள் கொழுத்தப்பட்டு கொண்டாருகின்றது.

எனினும் சர்வதேச நாணய நிதிய உதவிகள் தொடர்பில் வடகிழக்கில் மக்களிடையே சொல்லிக்கொள்ளத்தக்க அதிர்வலைகள்  எழுந்திருக்கவில்லை.

இதனிடையே இலங்கைக்கான இறக்குமதி தடைகள் நீக்கப்படவேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் ஆசிய பசுபிக்  தூதுவர் கோரிக்கைவிடுத்துள்ளார். 

தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதனை அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள என இலங்கை மற்றும் ஆசிய பசுபிக் பகுதிக்கான தூதுவ  தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை  சில இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், அந்நிய செலாவணி மாற்றத்திற்கான விதிகள் மற்றும் சில இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களின் மீதான தடைகள் இன்னும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இறக்குமதி தடைகள் நீக்கப்படாதென இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments