டக்ளஸிடம் குண்டர் படையல்ல! தொண்டர் படையாம்!



சட்ட விரோத  செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அரசஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

எமது பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாளாந்தம் அறியக்கிடைக்கின்றது.

இவற்றை கட்டப்படுத்த கடலோர காவற்படையினர் செயற்பட்டுவருகின்ற போதிலும்  அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தொண்டர் அணி செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த காவல்துறையின்; சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதற்காக நீதியமைச்சரோடு பேசியுள்ளதாகவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, புனர்வாழ்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.அத்துடன் போதைப்பொருள்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குற்றங்கள்  போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் தான் பணித்திருந்ததாகவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் துணை ஆயுதக்குழுவை கையாண்டு யுத்த கால குற்றங்களில் ஈடுபட்டதாக டக்ளஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.


No comments