பூநகரி பொன்னாவெளியும் போச்சு!
 

பூநகரி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலையை அமைக்க  யப்பானிய நிறுவனமொன்றிற்கு நிலத்தை வழங்க அரசு முன்வந்துள்ளது.

பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலை  அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சமூகப் பிரதிநிதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சீமேந்து தொழிற்சாலை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக ஈபிடிபி தெரிவித்துள்ளது.

No comments