இலங்கையின் கடன் சுமையைக் குறைப்பதற்கு தயார்


இலங்கை நிலைமையை ஆராந்து அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைய வழிவகை செய்வதற்கும் சீனா தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதற்காக தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடுமையான கடன் சுமையை தணிக்க தமது நாடு முக்கியத்தும் வழங்கும் என்றும் அந்த நாடுகளின் வளிர்ச்சிக்கு தீவிர பங்களிப்பை சீனா வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜி-20 கட்டமைப்பின் கீழ், கடன் நிவாரண முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்று ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

No comments