புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம்
பெட்ரோலியம், துறைமுகம், மின்சாரம், சுகாதாரம், நீர் வழங்கல், கல்வி, வங்கி, தபால் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தே தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
இதன் காரணமாக, இன்று புதன்கிழமை பல்வேறு சேவைகள் முடங்கும் என பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்த்க்கது
Post a Comment