முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டும் வகையிலேயே எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் பிற்போடப்பட்டதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment