கிரீஸ் நாட்டில் தொடருந்துகள் நேருக்கு நேர் மோதின: குறைந்தது 36 பேர் பலி!



கிறீஸ் நாட்டில் (கிரேக்கம்) இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய நகரமான லாரிசாவிற்கு வெளியே ஏதென்ஸில் இருந்து வடக்கு நகரமான தெசலோனிகிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்து ஒன்று தெசலோனிகியில் இருந்து பயணித்த சரக்கு தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சில பயணிகள் பெட்டிகள் தீயில் வெடித்துச் சிதறின.

ஏதென்ஸிலிருந்து இரவு 7.30 மணிக்கு (17:30 GMT) புறப்பட்ட தொடருந்தில் சுமார் 350 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து நள்ளிரவுக்கு சற்று முன்னர் தகவல் கிடைத்ததாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

விபத்துக்குப் பிறகு அவசர அரசாங்கக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் கிரேக்க சுகாதார அமைச்சர் தானோஸ் பிளெவ்ரிஸ் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார்.

No comments