கிளாலி குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு


கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரை குளம் ஒன்றில் நீராட சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

கிளாலியை சேர்ந்த மரியான் பீரிஸ் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

No comments