மனைவி வீட்டில் இல்லாததால் , வீட்டிற்கு தீ வைத்த கணவன்


மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். 

மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவி, இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, ​​கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இருவரது புத்தகங்களும் தீயில் கருகின.

No comments