யாழில் ஐந்து இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிள்களை களவாடி , அவற்றுக்கு போலி இலக்க தகடுகளை பொருத்தி வன்முறை சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதேவேளை கடந்த வருடம் ஒக்டொபர் மாதம் காரைநகர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு வீட்டிற்கு தீ வைத்து ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் , நாவற்குழி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நவாலி , மானிப்பாய் , காரைநகர் மற்றும் கிளிநொச்சி விசுவமடு பகுதிகளை சேர்ந்த 24 வயது தொடக்கம் 26 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments