காரைநகரில் வீட்டு கதவு நிலைகளை உடைத்து திருடிய கும்பல் மடக்கி பிடிப்பு!




யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் , வீட்டின் கதவுகள் , யன்னல்கள் , நிலைகள் என்பவற்றை திருடிய கும்பல் ஒன்றினை ஊரவர்கள் மடக்கி பிடித்து நயப்புடைந்த பின்னர் ஊர்காவற்துறை பொலிசாரிடம் கையளித்துள்ளனர். 

சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று காரைநகர் கோவளம் பகுதியில் ஆட்கள் அற்ற வீடுகளுக்குள் புகுந்து வீட்டின் கதவுகள் , யன்னல்கள் அவற்றின் நிலைகள் இவற்றை உடைத்து திருடி செல்ல முற்பட்டுள்ளனர். 

அதனை கண்ணுற்ற ஊரவர்கள் ஒன்று கூடி திருட்டு கும்பலை மடக்கி பிடித்து நயப்புடைத்த பின்னர் , ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  அவர்களது பட்டா ரக வாகனத்தையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அதனை அடுத்து ஐவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

காரைநகர் பகுதியை சேர்ந்த பலர் , யாழ்..நகர் பகுதி, கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களில் குடியேறி உள்ளமையால் , காரைநகரில் உள்ள அவர்களது பூர்வீக வீடுகள் ஆட்கள் அற்ற நிலையில் உள்ளமையால் , திருடர்கள் அந்த வீடுகளில் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர் 

No comments