போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது


போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சகல போராட்டங்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்களினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாமல் இருந்தால் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவது நியாயமானது எனவும், காலி முகத்திடல் போராட்டக்களத்தில் போராடி நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினர் தான் தற்போது தொழிற்சங்க போராட்டத்தில் ஈடபடுகிறார்கள் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கத்தினர் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள் எனவும், நாட்டு மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments