அச்சுவேலி விவசாயிகளுக்கு சீனாவின் டீசல்


சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 

புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லிட்டர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.

இதன்போது  630 விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கான டீசல் வழங்கப்படுகிறது. வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு  போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

No comments