போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிளில் மோதி முதியவர் படுகாயம்!


வேகமாக பயணித்த போக்குவரத்து பிரிவு பொலிஸாரின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி வலய கல்வி பணிமனைக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments