வாள் வெட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினரை பார்வையிட்ட சித்தார்த்தன்


யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

கோப்பாய் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு முன்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு , பிரதேச சபை உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலய திருவிழா கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்த மூவர் அவர்களின் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் நகைகளை அறுப்பதை தடுக்க முற்பட்ட பொழுது அவர்கள் இருவர் மீதும் வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த இருவரையும் அயலவர்கள்  மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


No comments