பிரதமர் தினேஷை தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்கவுள்ளது


மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்கவுள்ளது. 

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக வேட்பாளராகத் தோற்றவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பேச்சின்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

No comments