மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவில் மஹிந்த தேசப்பிரிய ?


தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினருக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது.

மஹிந்த தேசப்பிரிய முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments