யாழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் காலமானார்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலமானார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருந்து அதே  பல்கலைக்கழகத்தின் துணேவேந்தர் ஆனார் எனும் வரலாற்றை முதலில் பதிந்தவர் பேராசிரியர் விக்கினேஸ்வரன். 

கிழக்கு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் கணிதத் துறை பேராசிரியராக பணியாற்றியவர். 

துணைவேந்தர் காலப்பகுதியில் மட்டுமல்ல தனது பல்கலைக்கழக தொழில் வாழ்வு காலங்களில் குறிப்பிடத்தக்க தமிழ்த் தேசிய காரியங்களை ஆற்றியவர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட பீடாதிபதியாகவும் பதவி வகித்தவர். கடும் உழைப்பு மற்றும் குடும்ப வறுமையைத் தாண்டி முன்னேற முடியும் என மெய்பித்த பெருமனிதராவர்.

No comments