கருணா:கறுப்பு கள்ள கரண்ட்!

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பொதுமகனான காவலாளி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகளிடமிருந்து நெற்செய்கையை பாதுகாக்க மட்டக்களப்பு – தொப்பிகலயில் உள்ள வயல் காணியில் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே பொதுமகன் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியிலேயே சட்டவிரோத மின்வேலி இடப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.எனினும், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி மணிவாசகர் நகரை சேர்ந்த 53 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் இன்று (14) காலை கையளிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி பொதுமகனது மரணம் பொதுமக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.


No comments