நடக்குமா? இல்லையா? ஒரே குழப்பம்!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான  தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தபால் மூல வாக்குச் சீட்டை அச்சடிக்கத் தேவையான நிதி கிடைக்காததால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான  தபால்மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.

திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான  தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இன்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தபால் மூல வாக்குச் சீட்டை அச்சடிக்கத் தேவையான நிதி கிடைக்காததால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான  தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

இதனிடையே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் எந்த தேர்தலும் இடம்பெறாதென தமிழ் கட்சிகள் பலவும் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்திருப்பது தொடர்பில் தமிழ் தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

உள்ளூராட்சி மன்ற தேரதலை பிற்போடுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. என்றாலும் எதுவும் கைகூடவில்லை. தற்போது தேர்தல் செலவுக்கு பணம் வழங்குவதற்கு பணம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பிற்போடப்பட்டால் ஜனாதிபதி தேர்தலோ நாடாளுமன்ற தேர்தலோ இடம்பெறாது.

மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை பறிப்பதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாதென சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே பணம் இல்லை என்ற காரணத்துக்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்கக்கூடாது. தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments