திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி!வரலாற்றுப் பிரசித்தி பெற்றதும் பாடல் பெற்ற தலமுமான மன்னார் திருக்கேதீச்சர பெருமான் ஆலயத்தின் மகா சிவராத்திரி இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூசையுடன் ஆரம்பமாகியது.

முதலாம் சாமப் பூசை இன்றிரவு 8 மணிக்கும் இரண்டாம் சாமப் பூசை இரவு 10.30 மணிக்கும் மூன்றாம் சாம இலிங்கோற்பவ பூசை நள்ளிரவு 12.15 மணிக்கும் நான்காம் சாமப் பூசை பின்னிரவு 3 மணிக்கும் நடை பெற்று தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெறும். இதனைத் தொடரந்து நாளை ஞாயிறு அதிகாலை சுவாமி பாலாவி தீர்த்தக்கரைக்கு எழுந்தருள்வார்.

சிவராத்திரியையொட்டி ஆலய வெளி வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட அலங்கார மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் தமிழக மற்றும் இலங்கைக் கலைஞர்களின் ஆன்மீக உரைகள் மற்றும் பண்ணிசைக் கச்சேரி என்பன நடைபெறவுள்ளன.

No comments