நான் ராஜினாமா செய்யவில்லை!
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், பதவி விலகவில்லை என்று தெரியவந்துள்ளது.
அண்மையில் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக கடந்த 25ஆம் திகதி செய்திகள் வெளியாகின.
அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்றில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.
மேலும் வாக்காளர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கையெழுத்திட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்
Post a Comment