யார்? பேராசிரியர் விக்கினேஸ்வரன் !

 


பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் காலமாகி இருக்கின்றார்.

துணைவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டமைகாகவும்,

அரசியல் கோரிக்கைகள் கொண்ட  நினைவு தூபி அமைக்கப்படுவதை தடுக்கத் தவறியமை தொடர்பிலும் இராணுவப் புலனாய்வு பிரிவினரின் உத்தரவின் பேரில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார் .

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மேற்குறித்த கொடூரத்திற்கு எதிராக பேராசிரியர் விக்கினேஸ்வரன் ஆவர்கள் உயர் நீதிமன்றத்தையும் நாடி இருந்தார் 

மேற்படி வழக்கின் போது பல்கலை கழக மானிய ஆணைக்குழு தலைவர் உயர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் இராணுவப் புலனாய்வு தனக்களித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பேராசிரியரை பதவி நீக்கியாக  அறிவித்து இருந்தார் 

இந்த விளக்கத்தை ஏற்று  உயர் நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரன் தனது  பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை விசாரணை இன்றி நீதிமன்றமும் தள்ளுபடி செய்து இருந்தது 

அதாவது இராணுவ புலனாய்வாளர்கள் ஒரு துணைவேந்தரை பதவி நீக்கம் செய்த கொடூரத்தை இலங்கை நீதித் துறை ஏற்று கொண்டு இருந்தது  

இது தொடர்பாக உரத்து பேசி இருக்க வேண்டிய மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கம் , உட்பட பல்கலை கழக சமூகம் மௌனமாகவே இருந்தது 

நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு சம்மதத்துடன் தான் மேற்படி சம்பவங்கள் நடந்தது 

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலனாய்வின் அழுத்தத்தில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள்  புலனாய்வால் பதவி நீக்கப்பட்டதற்காக ஒரு  கண்டனம் தானும் சொல்லவில்லை .

பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு இதயபூர்வ அஞ்சலிகள்

No comments