ஏன் கலைக்குமாறு போராடவில்லை:சங்கரிவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்து பிழைத்தவர்கள் அவருக்கும் துரோகம் செய்து எங்களுக்கும் துரோகம் செய்கின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்று(23) இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கூறியவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  தேர்தல் பிற்போடப்படவேண்டும். இப்போது நடத்த வேண்டிய தேர்தல் நீதியான நாடாளுமன்ற தேர்தல்.

பெரியவர் முதல் சிறியவர் வரை பொருத்தம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். இன்றைய நிலைமையைப்பார்த்தால் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை. தேர்தலை நடாத்த வேண்டும் என்று, நாடாளுமன்றில் போராடுபவர்கள் ஏன் நாடாளுமன்றை கலைக்குமாறு போராடவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்..

No comments