பாம்பு பாபு மீது சூடு:முஸ்லீம்களா?



கிழக்கிலங்கையினில் சர்ச்சைகளை தோற்றுவித்துவரும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தங்கியுள்ள, அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் மீண்டும் முஸ்லீம் குழுக்கள் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

பாம்பு பாபு என தமிழ் முஸ்லீம்களால் அழைக்கப்பட்டுவரும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிற மத தலைவர்களை தாக்குவது கட்டைப்பஞ்சாயத்துக்களில் ஈடுபடுவதென பிரபலமானவராகவுள்ளார்.

இந்நிலையில் இன்று (13) அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தேரருக்கு காளங்களோ எவ்வித பாதிப்புக்களோ ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பிட்டிய சுமணரதன தேரர் தங்கியுள்ள, அண்மை நாட்களில் முஸ்லீம்களுடன் முரண்டுபிடித்துவருவதுடன் அவர்களது விவசாய நிலங்களை அடாத்தாக ஆக்கிரமித்தும் வருகின்றார்.

முன்னைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தரப்புடன் தொடர்ந்தும் உறவை பேணி வருவதாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீது முஸ்லீம் அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.


No comments