ஓய்விற்கே ஓய்வு! உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே வயோதிபம் மற்றும் உடல்நலமின்மை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கெடுப்பதிலிருந்து மூன்று மாத விடுமுறை அனுமதியை இரா.சம்பந்தன் பெற்றுள்ளார்.

ஏற்கனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் வெளியேறியுள்ளன.

இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் பதவியை தொடர்ந்தும் இரா.சம்பந்தன் வகித்துவருவது தொடர்பில் முன்னைய பங்காளிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

எனினும் தானே கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்தும் இருந்துவருவதாக இரா.சம்பந்தன் வாதிட்டுவருவது தெரிந்ததே.


No comments