சரத்பொன்சேகாவை நாடுகடத்தலாம்:சி.வி



என்னை பிரிட்டனிற்கு அனுப்பவேண்டுமானால் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமஸ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா  தெரிவித்துள்ளார்.

எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் .பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ் பெயரும் அல்ல. அப்பெயருக்கு சொந்தமான போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நான் இலங்கை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க போயிருந்தமை  அவருடன் சல்லாபித்து எனக்கென்று தனிப்பட்ட முறையில் எதுவும் கேட்கவல்ல. 

வடக்கு மாகாண ஆளுநர் என்னை ஜனாதிபதியை சந்திக்க விருப்பமா அவரிடம் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு இருக்கின்றது அப்பொழுது நீங்களும் வரலாம் என கேட்டிருந்தார்.

சந்திக்க வருகின்றேன் ஏனென்றால் கொழும்பில் அவரை சந்திப்பதில் எனக்கு சிரமம் உள்ளது இது இலகுவான விடயம் அதனால் நான் வருகின்றேன் எனக் கூறி சந்தித்து பல விடயங்களை தெரிவித்திருந்தேன்

வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்பவர்கள் அவர்களுக்கு உத்தரவாதம் என்ன கேட்ட போது சில நாடுகளுடன் இலங்கை முதலீட்டு உத்திரவாதங்களை தருவதாக வாக்களித்து உடன்படிக்கைகள் எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.அத்துடன் பிரித்தானியா போன்ற நாடுகள் அதில் உள்ளடங்குவதாகவும் அந் நாடுகளுக்கு ஊடாக முதலீடுகளைக் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஒரு உத்தரவாதம் சட்டப்படி தரப்படும் என்பதை அவர் வலியுறுத்தினார் .ஆகவே அதனை பரிசீலித்து பார்த்து அதனுடைய நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும் அதை நாங்கள் பாவிக்க வேண்டும் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.


No comments